தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளிலும் ஆரோ வாட்டர் பிளாண்ட் உள்ளதால் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிப்பு பணி தொடங்க உள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். மேலும்
ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 28 லட்சமாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
1/2 மற்றும் 1 லிட்டர் பாட்டில்களை தயாரித்து பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆவின் குடிநீரை விற்க திட்டமிட்டப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தொடர்பான புகைப்படம், விளம்பரங்கள் இடம் பெற்று வருகின்றன. இந்நிலையில் வருமானத்தை அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.