புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் நடைபெற்ற மொய் விருந்து - கோடி கணக்கில் வசூல்

நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய்விருந்து விழாவில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பது அந்த விழாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய்விருந்து விழாக்கள் நடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் கலை இழந்து காணப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் கலைக்கட்ட தொடங்கியது.

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே பொது இடத்தில் மொய் விருந்து விழா வைத்துள்ளனர். இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய் வரையில் மொய் வசூலாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பருக்கு மட்டும் ரூ .2.50 கோடியும் , பரிமளம் என்பவருக்கு ரூ .1.50 கோடியும் , அந்த ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள சிங்காரவேல் என்பவருக்கு ரூ .1.10 கோடியும் மொய் வசூலாகியுள்ளது. மேலும் அந்த விழாதாரர்களில் 20 - க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா 50 லட்சம் ரூபாய் வரையில் மொய் வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது.

நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் நடைபெற்ற மொய் விருந்து விழாவில் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டுமே ரூ .2.50 கோடியும் மொத்தமாக ஒரே நாளில் ரூபாய் 15 கோடி வரையிலும் வசூலாகி இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்