நூல் வெளியீட்டு விழாவிற்கு புதுக்கோட்டை வந்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்க பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டின்பிஎஸ்சி மூலம் வட்டார அலுவலகங்களில் காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது,
மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையாக முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டி உள்ளது. இந்தப் பணி நிறைவடைந்ததும் தமிழக முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Source from :PUTHIYATHALAIMURAI
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.