செந்தலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் அதன் தீர்மானங்கள்.!



தமிழக முழுவதும் இன்று  குடியரசு தினம் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று குடியரசு தினம் ஆகஸ்ட் 15- ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் இன்று 11 மணியளவில் செந்தலை தர்ஹாவில் கிராமசபை கூட்டம்  தொடங்கியது.. ஊராட்சி மன்றத்தலைவர் ரகுமத்துல்லா தலைமையில் கூட்டம், நடைபெற்றது. இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,  பள்ளி தலைமை ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், 100 நாள் பணியாளர்கள், இளைஞர்கள் , சுகாதாரதுறை பணியாளர்கள், சத்துணவு அமைபாளர்கள் கலந்துகொண்டனர். 


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-


செந்தலைவயல் ஊராட்சி மேலத்தெருவில் வடிகால் சுத்தம் செய்தல்


செந்தலைவயல் ஊராட்சி மீனவ காலனி பகுதியில் உடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைத்தல் 


செந்தலைவயல் ஊராட்சி மனமேடு தெரு கடற்கரை செல்லும் சாலை சரி செய்து தர வேண்டும் 


செந்தலைவயில் ஊராட்சியில் பழுது அடைந்த பழைய மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்றி அமைத்தல். 


செந்தலை வயல் ஊராட்சி ECR சாலை மேற்கு பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல்


செந்தலைவயல் ஊராட்சியில் ECR சாலை முதல் கடற்க்கரை வரை சாலையை விரிவாக அமைந்தல் 


குறிப்பு : - 

ஊராட்சியில்  இணையவழி வரி செலுத்தும் சேவை: 


கிராம ஊராட்சிகளில் இணைய வழியில் ஊராட்சிக்கான வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த WWW.VPTAX.TNRD.TN.GOV.IN என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் தங்களின் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் இதர வரியில்லா கட்டணங்களை இணைய வழியில் எளிதாக செலுத்த இயலும்.


ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் வரியினை செலுத்துவதற்கு தங்களின் கேட்பு எண் அல்லது கைப்பேசி எண்ணை கொண்டு எளிதாக கேட்பு விவரங்களை பெற இயலும். இந்த தளத்தில் பொதுமக்கள் தங்களின் வங்கி அட்டைகள் (CREDIT CARD, DEBIT CARD), UPI, இணைய வங்கி சேவை (INTERNET BANKING) ஆகியவை மூலம் ஊராட்சிக்கான வரி மற்றும் கட்டணங்களை எளிதாக செலுத்தலாம்.


மேலும், ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி சேவையின் மூலம் அல்லது ஒவ்வொரு ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கருவி (Pos Device) மூலம் ஊராட்சிக்கான வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். 







கருத்துரையிடுக

0 கருத்துகள்