செந்தலைப்பட்டினம் மீனவ நண்பர்களால் நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு மாபெரும் படகுப் போட்டியில் நம்புதாளை முதல் பரிசை தட்டிச்சென்றனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைப்பட்டினத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு செந்தலைப்பட்டினம் மீனவ நண்பர்களால் நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு மாபெரும் பாய்மர படகு போட்டி 23/06/2024 ஞயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 17 படகுகள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றது.
* இப்போட்டியில் முதல் இடத்தை பிடித்து முதல் பரிசு தொகை ரூ. 40 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை அம்பலம் படகு பெற்றது.
* இரண்டாம் பரிசு தொகை ரூ. 30 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை இரண்டாம் இடம் பிடித்த மோர்பனை ஈஸ்வரன் படகு பெற்றது.
* மூன்றாம் பரிசு தொகை ரூ. 20 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை மூன்றாம் இடம் பிடித்த தொண்டி புதுக்குடியை சேர்ந்த வேலாயுதம் படகு பெற்றது.
* நான்காம் பரிசு தொகை ரூ. 10 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை நான்காம் இடம் பிடித்த தொண்டி புதுக்குடியை சேர்ந்த கருப்பையா படகு பெற்றது.
* ஆறுதல் பரிசாக ரூ .5 ஆயிரம் முள்ளிமுனை ராஜாங்கம் படகு பெற்றது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.