சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்




தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி துணை மின் நிலையப் பகுதிகளான நாடியம், கள்ளம்பட்டி, மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, செருபாலக்காடு, கழனிவாசல், கொரட்டூர், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, ஊமத்தநாடு, ராவுத்தன்வயல், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், பெருமகளூர், பேராவூரணி நகர், காலகம், பைங்கால், திருச்சிற்றம்பலம், குறிச்சி, வாட்டாத்திக்கொல்லை, ஆவணம், பட்டத்தூரணி, பின்னவாசல், மணக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்