இன்று தெரிந்து கொள்வோம் பதிவில் நாம் ரேஷன் கடை திறந்துள்ளதா என்று ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்.
அந்த காலத்தில் ரேஷன் கடை திறப்பதற்கு முன்பே முன்னதாக சென்று அங்கு காத்து இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமையில்லை இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் ஆன்லைனில் ரிச்சார்ஜ் கட்டணம் , மின்சார கட்டணம் , சொத்துவரி கட்டணம் என பலவகை கட்டணங்களை ஆன்லைன் மூலம் சுலபமாக வீட்டில் இருந்தபடியே காட்டுவதற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் ரேஷன் பொருட்களை அப்படி வாங்குவதற்கு ஏதும் செய்யமுடியாது. நேரில் சென்றுதான் வாங்கவேண்டும். ஆனால் ஆன்லைனில் ரேஷன் கடை திறந்துள்ளதா என்று பார்க்கலாம். மற்றும் பிற தகவல்களையும் பெற முடியும்.
உங்கள் ஊரில் ரேஷன் கடை ஆன்லைன் மூலம் திறந்திருக்கிறதா என்று பார்ப்பது எப்படி ?
* உணவு பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளம் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடை எப்போது திறந்துள்ளது என்று பார்க்கலாம்.
* உங்கள் ஊரில் இன்று ரேஷன் கடை திறந்துள்ளதா என்று பார்ப்பதற்கு https://www.tnpds.gov.in/ உங்களுடைய வலயத்தளத்தில் search செய்து பார்க்கவும்.
* search செய்தவுடன் உங்களுடைய பொது விநியோக இணையதளத்தில் திட்ட அறிக்கையை click செய்யவும்.
* அதன் பிறகு open ஆனதும் நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தேர்வு செய்து கொள்ளவும்.
* அதன் பிறகு உங்கள் ஊர் ரேஷன் கடையின் விவரங்கள் இணையதளத்தில் வந்துவிடும். உங்கள் ஊர் ரேஷன் கடை திறந்துள்ளதா , திறக்கவில்லையா என்பதை அதில் தெரிந்து கொள்ளலாம்.
* கடை திறந்துள்ளது என்றால் ஆன்லைன் என்று பச்சை நிறத்தில் இருக்கும். கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் என்று சிவப்பு நிறத்தில் காணப்படும்.
பொருட்களின் விவரம் :
ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்றும் பொது விநியோக திட்டத்தின் மூலம் காணலாம். அதற்கு பொருட்கள் இருப்பு நிலையை click செய்து உங்க ஊர் ரேஷன் கடையில் இன்று என்னென்ன பொருட்கள் தருகிறார்கள் என்று அதற்கு தகுந்தது போல் எப்போது பொருட்களை வாங்கலாம் என்றும் முடிவு செய்யலாம்.
புகார் விவரம் :
உங்கள் ஊர் ரேஷன் கடையில் ஏதேனும் தவறான செயல்பாடுகள் இருந்தால் புகார் செய்வதற்கும் இதில் வசதிகள் இருக்கிறது. அதற்கு புகார் என்பதை click செய்யவும் மேலும் புகார் பற்றிய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா என்றும் இதில் தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் இதில் ரேஷனில் பெயர்கள் சேர்ப்பது , மொபைல் எண்களை ரேஷன் அட்டையில் இணைப்பது , ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது.
பொது விநியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம்... https://www.tnpds.gov.in/
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.