பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் தோல்வியுற்று தூக்கிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அன்டனூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மனைவி ரேணுகா. இவர்களது மகள் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனாவின் தந்தை சேகர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதன் பிறகு ரேனுகா தீத்தான் விடுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் மீனாவை ஒப்படைத்தார்.
அங்கிருந்து கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மீனா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மீனா அதில் தோல்வியுற்றார். ஆகையால் மீண்டும் துணைத் தேர்வு எழுதினார். ஆனால், துனைத் தேர்விலும், சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் மீனா தோல்வியுற்றார். இதனால் மன வேதனை அடைந்த மீனா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலே மீனா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கறம்பக்குடி காவல் துறையினர் மீனாவின் பிரேத உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக கறம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் தோல்வியுற்று தூக்கிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினம் தினம் தொடந்து தற்கொலை பற்றிய செய்திகள் வருவது மனதை பதபதைக்க வைக்கிறது. உலகில் காலூன்றி வாழ்ந்து, வென்று கட்ட வேண்டிய சிறுவர் சிறுமிகளும், இளைஞர்களும் தோல்வியை தழுவிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
மாணவ-மாணவிகளே..... உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.