அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் - மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழசக்தில் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.

அதன்படி ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது. அதேபோல் பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை சிதறிக்கிடக்ககூடாது. அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது. சுத்தத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்று விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பழனி அருகே பேசிய அவர்... அரிசி ஆனாலும் சரி.. பருப்பு ஆனாலும் சரி.. சர்க்கரை ஆனாலும் சரி.. அனைத்தையும் இனி பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள் விரைவில் அதிகம் தொடங்கப்படும். 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாக தாங்கள் விளைவித்த அரிசியை கொண்டு சேர்க்க முடியும். அதேபோல் ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும், என்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்