தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை இன்று காலை கடலில் ஒரு சடலம் மிதந்து வந்துள்ளது. அதனை கண்ட அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை தொப்புள்கொடி அறுபடாமல் சடலமாக கிடந்துள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து SDPI கட்சியின் மீனவர்அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.பஸ்லூன் நேரில் சென்று சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் மூலமாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்பொழுது கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, SI சுப்ரமணி ,MEW ராஜா, ஃபீல்டு ஆஃபிசர் சியாமளா தேவி மற்றும் SDPI கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளர் H.அப்துர் ரஹ்மான் அவர்கள் உடன் இருந்தார்கள்.
பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற கொடூர தாய் யார் என காவல்துறை உரிய விசாரணை செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுப்பட்டினம் கடலில் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇


0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.