தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். இவருடைய மகன் வைரமுத்து (வயது19). இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிா் முகைதீன் கல்லூரியில் பி.எஸ்சி முதல் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் நித்திஷ் என்ற வைரக்குமார்(16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் இவர்கள் இருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒரு கோவிலில் சாமி கும்பிடுவதற்காக கருங்குளம் நசுவனி ஆற்றுக்கு சென்று குளித்தனர். அப்போது நித்திஷ் ஆற்றில் மூழ்கினார். உடனே அவரை காப்பாற்ற வைரமுத்து முயன்றார். அப்போது அவரும் ஆற்றில் மூழ்கினார். இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து ஆற்றில் இறங்கி அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்த நிலையில் வைரமுத்துவை மீட்டனர். நித்திசை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இ்தையடுத்து அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி நித்திசை தேடினர். அப்போது ஆற்று அருகே தடுப்பணையில் மதகு திறந்திருந்ததால் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் தேடும் பணி தாமதமானது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திறந்து இருந்து மதகை மூடினர். இதனால் நீர்வரத்து குறைவானது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 6 மணிநேரத்திற்கு பிறகு நித்திசை சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆற்றில் மூழ்கி இறந்த 2 மாணவர்களின் உடல்களை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.