பேராவூரணி - சேதுபாவாசத்திரம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறதாவது, "மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிற காரணத்தால், வருகிற செவ்வாய்க்கிழமை (20/09/2022) அன்று

 பேராவூரணி 110/11-33 துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெருமகளூர் 33 kv 27 33கேவி ஒட்டங்காடு 33 கேவி திருச்சிற்றம்பலம் 33 கே வி மற்றும் வா.கொள்ளைக்காடு 33 கேவி ஆகிய மின் பாதைகள் பேராவூரணி நகர், ஆவணம்,பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்,

சேதுபாவாசத்திரம் 110/33 துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாட்டாணிக்கோட்டை 33கேவி குருவிக்கரம்பை 33 கே வி கல்லம்பட்டி 33 கே வி பள்ளத்தூர் 33கேவி நாட்டியம் 33கேவி ஆகிய மின் பாதைகள் குருவிக்கரம்பை, சேதுபாவாசத்திரம், கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேதுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல் : முனைவர் 
வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்