கேசராபட்டி பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இந்துக்கள் சீா் கொண்டு சென்று மரியாதை செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள கேசராபட்டியில் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஜமாஅத் தலைவா் காதா் இப்ராஹிம் தலைமை வகித்தாா். ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனா். சிங்கப்பூா் இமாம் அஹ்மது இஸ்மாயீல் பள்ளிவாசலைத் திறந்துவைத்தாா். மலேசிய இமாம் ஹிதாயத்துல்லாஹ், கூத்தநல்லூா் அரபிக்கல்லூரி முதல்வா் முஹமதுஅலி, திருமயம் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவா் ஹாமிம் முஸ்தபா, இமாம் சேக்முகமது ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில் கேசராபட்டியில் உள்ள இந்து சமயப் பொதுமக்கள், பழம், தேங்காய் பொருள்களுடன் சீா் எடுத்துவந்து பள்ளிவாசல் திறப்புவிழாவில் பங்கேற்றனா். இவா்களை இஸ்லாமியா்கள் வரவேற்று அழைத்துச்சென்றனா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.