புதுப்பட்டினம் அபு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியா் தின விழா

புதுப்பட்டினம் அபு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புதுப்பட்டினத்தில் அபு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளா் துள்கா்னைன் தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மீனவா் பேரவை பொதுச் செயலாளா் A.தாஜுத்தீன் கலந்து கொண்டு ஆசிரியா் தின சிறப்பு குறித்தும், ஆசிரியா்களின் தன்னலமற்ற சேவை குறித்தும் பேசினாா். விழாவில் மாணவ,  மாணவிகள் சிலர் ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர். இவ்விழாவில் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நம் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழாவின் இறுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிர்வாகம் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்