தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உணவகம் நடத்தி வரும் தாவூத் என்பவர் தனது உணவகத்துக்கு வரும் ஏழைகள், பணம் இல்லாதவர்களுக்கு இலவச உணவு வழங்கி உதவி வருகிறார்.
புன் முறுகள் சிறிப்பு, பண்பும் பணிவும் கொண்ட அணுகுமுறை, உபசரிக்கும் குணம், அடுத்தவருக்கு உதவி செய்யும் எண்ணம் போன்ற இந்தக் குணங்கள் இருப்பவர்களை அனைவரும் விரும்புவார்கள். இவர்களின் இந்தக் குணங்களால் முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் மனதில் கூட இடம் பிடித்து விடுவார்கள்.
இங்கு நல்லவர்களுக்கு இடமில்லை, இது நல்லவர்களுக்கான காலமில்லை என புலம்பும் நபர்களிடம் இதுமட்டும் உலகமில்லை நாங்களும் இதே உலகில்தான் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது சிலர் காட்டி விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் அதிரையை சேர்ந்த தாவூத்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள தக்வா பள்ளி கடைத் தெருவில் அல் மதினா என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றை இவர் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். பகல் நேரத்தில் பிரியாணி, இரவு நேரத்தில் பரோட்டா. இதுவே இவரது உணவகத்தின் சிம்பிளான மெனு. ஆனால், நியாயமான விலையில் சுவையான தரமான உணவை வழங்கி வருவதால் அதிராம்பட்டினம் மக்கள் இவரது உணவகத்தை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். கடையில் அமர்ந்து சாப்பிடுவோரைவிட பார்சலிலேயே இங்கு அதிகளவிலான மக்கள் உணவை வாங்கிச் செல்கின்றனர். எப்போதும் பிஸியாகவே இருக்கும் தனது உணவகத்தின் மூலம் பலரும் செய்யத் தயங்கும் மகத்தான சேவையை தாவூத் செய்து வருகிறார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். அதற்கேற்ப தனது உணவகத்தில் 'சாப்பாடு வாங்க முடியாதவர்கள் இலவசமாகவே சாப்பிட்டுக் கொள்ளட்டும். இது இறைவனின் சொத்து.' என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார் தாவூத்.
எத்தனை மதங்கள் இவ்வுலகில் இருக்கிறதோ அத்தனை மதங்களும் தர்மத்தையும், ஏழைகளுக்கு உணவளிப்பதையும் வலியுறுத்துகின்றன. அந்த அளப்பறிய சேவையை தாவூத் செய்து வருகிறார். இதன் மூலம் பணம் இல்லாமல் பசியோடு இருக்கும் ஏழைகள் சிலர் தினமும் இவரது உணவகத்துக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இது குறித்து தாவூத் அவர்களிடம் நாம் விசாரித்தபோது, 'ஏழைகள் சாப்பிடுவதால் நமக்கு நன்மைதான் கிடைக்கிறது. இயலாதவர்கள் யார் என்று தெரிந்து அவர்களுக்கு இலவச உணவை கொடுக்கிறோம். ஏழைகள் இங்கு வந்து சாப்பிட்டு செல்கிறார்கள்.' என்று அலட்டிக்கொள்ளாமலும், இதை பெருமை என கருதாமலும் எளிமையாக கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.