தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணம் மனோராவில் காரும்,பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு மதுக்கூரில் இருந்து வடக்கமாபட்டிணத்தை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனமும் பள்ளி குழந்தைகளை மனோரா சுற்றுலா தளத்திற்கு கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் இருந்து அழைத்து வந்த வாகனமும் மனோரா வளைவில் இரண்டு வாகனமும்
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளி குழந்தைகளுக்குக்கும் லேசான காயமும் ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளருக்கும் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே ஒருவர் இறந்துவிட்டார். ஆசிரியைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். விபத்து குறித்து இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.