பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு...
வணிக சின்னம் பிரச்னை தொடர்பாக போன் பே நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய நிறுவனத்தின் வணிகச் சின்னத்தைப் போல, மொபைல் பே நிறுவனத்தின் வணிகச் சின்னம் இடம் பெற்றிருக்கிறது. அதனால் மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல், மொபைல் பே செயலியின் லோகோவும் போன் பே செயலியின் லோகோவைப் போல் இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் விசாரித்தார். இரு செயலிகளுடைய வணிக சின்னமும் லோகோவும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் கூட, சாதாரண பொது மக்களுடைய பார்வையில் அதைப் பார்க்கும் போது, அவை இரண்டும் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன என்று கூறிய நீதிபதி அதனால், மொபைல் பே நிறுவனம் பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.