தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

வானிலை ஆய்வு மையத்தில் அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 4 ஆம் தேதி வரை படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும்.

அக்டோபரில் பெய்த மழை அளவானது 15 சென்டிமீட்டர் என்று பதிவாகி உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை 45% இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழை என்பது தமிழகத்துக்கு மட்டும் என்பது கிடையாது கேரளா, கர்நாடகா என்று அனைத்தும் சேர்ந்து தான். தமிழக பகுதியை பொறுத்த வரை இயல்பை எதிர்பார்க்கலாம் என்றார். படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்