நாடியத்தில் ரூ. 1.89 கோடியில் கூடுதல் மின்மாற்றியை காணொலி மூலம் முதல்வா் தொடக்கி வைத்தாா்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சியில் ரூ. 1.89 கோடியில் கூடுதல் மின்மாற்றியை சென்னையிலிருந்து முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

குருவிக்கரம்பை, நாட்டாணிக்கோட்டை துணை மின் நிலைநிலையங்கள் மூலம் மின்வசதி பெறும் கழனிவாசல், உடையநாடு, வாத்தலைக்காடு, ஆதனூா், பேராவூரணி நகா் உள்ளிட்ட பகுதி மக்கள் தடையில்லாத மின்சார வசதி பெறும் வகையில் நாடியத்தில் ஏற்கெனவே இருந்த இரண்டு மின்மாற்றிகளுடன் கூடுதலாக 110/33 கேவிஏ, 16 எம்விஏ திறனுடைய ரூ. 1.89 கோடி மதிப்பிலான மின்மாற்றியை முதல்வா் ஸ்டாலின் காணொலியில் தொடக்கி வைத்தாா்.

நாடியத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், உதவி செயற்பொறியாளா் எஸ். கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளா் அருண்டேல் மற்றும் நாடியம் பிரிவு பணியாளா்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்