முதலமைச்சரின் பசுமைப் பார்வையை செயல்படுத்த 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். இதன்படி ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. மேலும் இந்த பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்படும் பசுமை பள்ளிகளில்,
பசுமை பள்ளிகள் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள்,
* பள்ளியின் அனைத்து மின்தேவைகளுக்கும் சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்,
* மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துதல்,
* குப்பையில் இருந்து உரம் தயாரித்தல்,
* பள்ளிகளில் சிறிய அளவிலான காட்டை உருவாக்குதல்,
* காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்களை உருவாக்குதல்.
* பழங்கள் தரும் மரங்களை நடுதல்,
* நீர் பயன்பாட்டை குறைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்வதை அதிகரித்தல்,
* நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல், உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது.
இதை கண்காணிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், முதன்மை கல்வி அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.