கலங்கரை விளக்கம் அமைத்து தர வேண்டும்: அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் கோரிக்கை

மீனவர்கள் திசை மாறிச் செல்லும் அபாயம் உள்ளதால், கலங்கரை விளக்கம் அமைத்து தரவேண்டும் என அதிராம்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்தி நகர், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். தற்போது மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் கடலுக்கு சென்று விட்டு மீனவர்கள் திரும்பும் போது கரை தெளிவாக தெரியாமல் உள்ளது. இதனால் மீனவர்கள் திசை மாறி செல்லும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் சரியான நேரத்தில் தாங்கள் கடலில் பிடித்த மீன்களை கொண்டுவந்து விற்பனை செய்ய முடியாத நிலைமை மேலும் கடலுக்குள் திசை மாறி செல்வதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. எனவே அதிராம்பட்டினம் பகுதியில் மீனவர்கள் பயன்பாட்டிற்கான உடனடியாக கலங்கரை விளக்கம் அமைத்து தர வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்