கார்களின் பின் பக்க விண்டுஷீல்டில் (பின் பக்க கண்ணாடி), கோடுகள் வழங்கப்பட்டிருக்கும். பலரும் இந்த கோடுகளை டிசைன் ஸ்டிக்கர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அவை டிசைன் ஸ்டிக்கர்கள் கிடையாது. பாதுகாப்பு நோக்கத்திற்காகவே இந்த கோடுகள் வழங்கப்படுகின்றன.
பொதுவாக குளிர் காலங்களில் காரின் பின் பக்க விண்டுஷீல்டில் பனி அதிகமாக படர்ந்திருக்கும். இதனால் உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரர் மூலமாக காரின் பின் பக்கத்தை டிரைவரால் தெளிவாக பார்க்க முடியாது. இவ்வாறான சூழல் ஏற்பட்டால், கார் சாலை விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே காரின் பின் பக்க விண்டுஷீல்டில் படர்ந்திருக்கும் பனியை அகற்றுவதற்காகதான் இந்த கோடுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் டிரைவர் பின் பக்கத்தை தெளிவாக பார்த்து, காரை ஓட்ட முடியும். உண்மையில் இவை கோடுகள் கிடையாது. இவை சிறிய ஒயர்கள் ஆகும். கார்களில் இருக்கும் இந்த அமைப்பிற்கு டீஃப்ராஸ்டர்கள் (Defrosters) என்று பெயர்.
டீஃபாகர் (Defogger) மற்றும் டீமிஸ்டர் (Demister) என்ற பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. காரின் பின் பக்க விண்டுஷீல்டின் மீது படர்ந்திருக்கும் பனி மற்றும் தண்ணீர் துளிகளை அகற்றுவதுதான் இந்த அமைப்பின் வேலை. பின் பக்க விண்டுஷீல்டில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய ஒயர்கள் வெகு விரைவாக பனியை அகற்றி விடும். காரின் பின் பக்க விண்டுஷீல்டில் இருப்பவை செகண்ட்ரி டீஃப்ராஸ்டர் ஆகும். இந்த டீஃப்ராஸ்டர் அமைப்பை பயன்படுத்துவதற்கு காரின் டேஷ்போர்டில் ஸ்விட்ச் வழங்கப்பட்டிருக்கும். பின் பக்க விண்டுஷீல்டின் மீது பனி அல்லது தண்ணீர் படர்ந்திருக்கும்போது, இந்த ஸ்விட்ச்சை ஆன் செய்ய வேண்டும். அப்போது இந்த ஒயர்களுக்கு மின்சாரம் பாயும். இதன் மூலமாக ஒயர்கள் வெப்பமடைந்து, பனி மற்றும் தண்ணீர் துளிகள் அகற்றப்படும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.