மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

வடக்கு கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி இன்றோ அல்லது நாளையோ மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். 23ஆம் தேதி புதன்கிழமை அதே திசையில் தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்ற நிகழ்வால் ஞாயிறு, திங்கள், செவ்வாய் 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே வரும் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்