சவுதி அரேபியாவில், வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு, கார்கள் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
வியாழக்கிழமை, சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜித்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திடீரென பெய்த கனமழையில் நேரிட்ட அசம்பாவிதங்களில் சிக்கி இரண்டு பேர் பலியாகினர். பாதுகாப்புக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அவசியம் இன்றி மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று மெக்கா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான ஜித்தாவில் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களுக்கு கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி, கனமழை தொடங்கியபோதே, மெக்கா யாத்திரை செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டது. கனமழை நின்ற பிறகே சாலை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளனர்.
சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் வானிலை காரணமாக நேற்று விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளன. ஜித்தாவில் தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றிவிடப்பட்டன.
Jeddah, Saudi Arabia drowns in flood after 246mm of rainfall in span of 10 hours. Rain rate peaked at 900mm/hr there at private PWS. pic.twitter.com/K829Y7y4vH
— babar kazmi (@kazmibabar) November 24, 2022
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.