மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அறிவுறுத்தி உள்ள தமிழகஅரசு, அதற்காக நேற்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவியின்படி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இணைப்பு பணியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் மாற்று கணினியை தயாராக வைத்திருக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த நுகர்வோர்களின் எண்ணிக்கை 19,35,867, ஆன்லைன் மூலமாக இணைத்த நுகர்வோர்கள் 15, 98, 413, மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று இணைத்தவர்கள் 3, 37, 454 பேர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.