ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள்தான். அழகு என்றும் ஆபத்து என்று சொல்வார்களே, அதுபோல இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004. இந்திய மண்ணில் 'சுனாமி' ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை....
2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்துஎழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டிய தினம் இன்று
இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென வந்த ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது. இதில் 14 நாடுகளிலும் சேர்த்து 2½ லட்சம் பேர் பலியானார்கள். தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி சுனாமியால் உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் இன்னமும் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழக கடலோர பகுதிகள் முழுவதிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
செந்தலை கடற்கரையில் தாக்கம் எப்படி இருந்தது?
செந்தலை கடற்கரை பகுதியில் அதிக அளவில் அலைகள் இருக்காது ஆனால் சுனாமி தினத்தில் இதற்கு முன்பு யாரும் கண்டிராத இராட்சத அலைகள் தோன்றியதை பார்க்க முடிந்தது. இதன் காரணமாக கடற்க்கரை சாலை தொடக்கம் எல்லை வரை கடல்நீர் சென்றது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லாவிட்டாலும் படகுகள் மற்றும் மீனவர்களின் வலைகள் மற்றும் பொருள்கள் பெரிய அளவில் சேதம் அடைந்தது. செந்தலை கடற்கரை பகுதிகளில் இருந்த இறால் பண்ணைகளில் அணைக்கட்டுகள் காரணமாக பெரிய அளவில் கடல் நீர் ஊருக்குள் வருவது சற்று தடுக்கப்பட்டது.
செந்தலை கடற்கரையில் சுனாமியை நேரில் கண்ட இளைஞர்கள் கூறியதாவது:
சுனாமி வந்த நாள் அல்லது அடுத்த நாளோ நமது ஊர் தர்காவில் கத்தத்து இரவு என்று நினைக்கின்றோம் சுனாமி வந்த நாள் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் சுனாமியை காண கடற்கரையை நோக்கி படையெடுத்தனர், நாங்களும் சென்றோம் அப்போது கடல்கரை அருகில் ஆற்றுவாய் பக்கத்தில் ஒரு மணல் முட்டுமேல் அமர்ந்திருந்தோம் அப்போது சிறிது நேரம் கடல் கடல் உள்வாங்கியது அப்போது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது போல தோற்றமளித்தது அந்த அளவிற்கு கடல் நீர் உள்வாங்கியது.
சிறிது நேரம் நாங்கள் அமர்ந்து இருந்த போது தூரத்தில் கடலில் வெள்ளை நிறத்தில் உயரமாக ஒன்று தோன்றியது, அதனை கண்ட மக்கள் அனைவரும் அது பெரிய அலைதான் என்று கூறினர் இது போன்ற பெரிய அலையை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்று மீனவர்களும் அங்கே கூடியிருந்த மக்களும் கூறினர் பின்பு அந்த பெரிய அலை சில வினாடி நேரத்தில் கரைக்கு அருகில் வரத்தொடங்கியது அதனைக் கண்ட மக்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர். தூரத்தில் கண்ட அலை எங்கள் பக்கத்தில் வந்ததைக் கண்டு மணல் முட்டுமேல் அமர்ந்திருந்த நாங்களும் ஓட்டம் பிடித்தோம் நாங்கள் கடற்க்கரை சாலை தொடக்கப் பகுதியில் சென்று நின்றுகொண்டோம், அதிவேகமாக வந்த அலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகளை அனைத்தும் அடித்துச் சென்றது அந்த அலையின் காரணமாக கடல்நீர் கடற்க்கரை சாலை தொடக்கம் எல்லை வரை சென்றது.
சில நிமிடம் அடித்த அலைகள் பின்பு மீண்டும் உள்வாங்க தொடங்கியது சுனாமி ஏற்பட்ட பின்னர் கடற்கரை சாலையின் இருபுறமும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது அதில் நாங்கள் மீண்டும் கடற்கரையை நோக்கி நடந்து சென்றோம் அந்த அலையில் அடித்து வரப்பட்ட பல வகை மீன்கள், நண்டுகள், கடல் பாம்புகள் துடிப்பதை கண்டோம் அலையில் அடித்து வரப்பட்ட மீன்கள் மற்றும் நண்டுகளை பல மக்கள் அதை பிடித்தனர் அந்த நாள் முழுவதும் சற்று கடல் அலை உள்வாங்குவது மீண்டும் அலைகள் கரையை நோக்கி வருவதுமாக அந்த நாள் இருந்தது என இவ்வாறாக இருந்தது என சுனாமியை நேரில் கண்ட இளைஞர்கள் கூறினார்கள்.
இந்த மறையாத துயரச் சுவடுகள் ஒவ்வொருவரின் மனதில் ஏற்பட்ட காயத்திற்கான மருந்து காலத்திடம் மட்டுமே இருக்கிறது என்றாலும், எந்த காலத்தாலும் அழிக்க முடியாத வடுவைசுனாமி ஏற்படுத்தி சென்றுவிட்டது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற கோர நிகழ்வு ஏற்பட வேண்டாம் என்பதே அனைத்து மக்களின்
வேண்டுதலாகும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.