கட்டுமாவடி கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை…

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும் பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகின்றது இந்நிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர் விஜய் மற்றும் செம்பியன் மகாதேவிபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ரகு ஆகிய 2 பேரும் குறைவான ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் பட்டி வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் அதிக எடை கொண்ட பெரிய மீன் சிக்கி இருந்தது. நினைத்து அதை எடுத்துப் பார்த்தபோது 15 கிலோக்கும் மேல் எடை கொண்ட ராட்சத ஆமை இருந்தது. இது தடை செய்யப்பட்ட உயிரினம் என்பதால் மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்