சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மாவட்ட கடல் பகுதியில், 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்குள் மீன் பிடிக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதியை மீறி, வெளி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் வந்து மீன்பிடிப்பதாகவும், இந்த படகுகளால், நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதமடைவதாகவும் நாட்டுப்படகு மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜ், சார் ஆய்வாளர் ஆனந்த், காவல் சார் ஆய்வாளர்கள் நவநீதன், சுப்பிரமணியன், சிறப்பு காவல் உதவியாளர் போஸ் நடனம், முதல்நிலை காவலர் ராஜா, மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முத்துப்பேட்டை வாய்க்காலுக்கும், செல்லக்கண்ணி ஆற்று வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் 3½ நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்குள் 2 விசைப்படகுகள் விதிகளை மீன்பிடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவை மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகுகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.