சேதுபாவாசத்திரம் அருகே தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும் கரையோரத்தில் மீன் பிடி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு நாட்டுப் படகு மீனவர்களின் வலைகள் சேதம் அடைவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நாகப்பட்டினம் மீன் துறை இணை இயக்குனர் ஆணையின்படி, தஞ்சாவூர் மீன் துறை உதவி இயக்குனர் சிவகுமார் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் மீன் துறை ஆய்வாளர் துரைராஜ், வேதாரண்யம் மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோர் கடலில் கூட்டு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது முத்துப்பேட்டை செல்லக்கண்ணு வாய்க்காலுக்கு நேரே மூன்று நாட்டிகல் மைலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த 8 விசைப்படகுகளும், மல்லிபட்டினத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளும் அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டது கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டது. மேலும் மூன்று நாட்டிகல் மைலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றும் கண்டறியப்பட்டது.
மேற்குறிப்பிட்ட 11 விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.