ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறைப்படி மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மத்திய நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்த இந்திய சட்ட ஆணையம் இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டது. இந்த பதிலை பிரதான கட்சிகள் ஜனவரி 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதில் அதிமுக கட்சிக்கு அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையத்திடம் இருந்து கடிதம் அனுப்பபட்டது.
இந்த கடிதத்திற்கு பதில் கூறும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முறைக்கு திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.