திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமுமுக மாணவர் அமைப்பு சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சார்பாக 17-01-2023 இன்று காலை 7.00 மணியளவில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் சுமார் கிட்டத்தட்ட 200 பேர் பங்குபெற்றனர் இதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ-5000/- இரண்டாம் பரிசு ரூ-3000/- மூன்றாம் பரிசு ரூ-2000/- உடன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
செந்தலை இளைஞர் இரண்டாம் இடம்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் மகன் மெளலான ஆஷிக் மாரத்தான் ஓட்டத்தில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்றார். இரண்டாம் இடத்தை பிடித்த இளைஞர் மெளலான ஆஷிக் அவர்களுக்கு ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.