மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர மீனவர்கள் கோரிக்கை

மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக மல்லிப்பட்டினம் மீனவர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, 

தஞ்சாவூர் மாவட்டம் சேதுவாசத்திரம் அருகில் உள்ள மல்லிப்பட்டினத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்தன. புதிதாக கட்டப்பட்ட துறைமுகத்தில் படகுகளை பாதுகாக்கும் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் அதை அமைக்கவில்லை. மீனவர்கள் சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பலமுறை முறையிட்டும் இன்றுவரை தூண்டில் வளைவு அமைத்து தரவில்லை. அதே சமயம் தூண்டில் வளைவு இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீகிய கஜா புயலில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கின. 

தற்போது நூறுக்கும் குறைவான விசைப்படகுகளை மீன்பிடி தொழில் செய்து வருகிறது. எதிர்காலங்களில் பருவமலையின் தாக்கம் அதிகமாகவோ புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் படகுகளுக்கு மீண்டும் சேதம் ஏற்படுமோ என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே மீனவர்கள் நலன் கருதி படக்களை பாதுகாக்கும் வண்ணம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்