புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் சீனா சென்றிருந்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு அதே மருத்துவமனையில் மருத்துவராக பயிற்சி பெற்று வந்தார் புதுக்கோட்டையை சேர்ந்த ஷேக் அப்துல்லா
இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்து விட்டதாகவும் சீனாவிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஷேக் அப்துல்லாவின் உடலை சீனாவிலிருந்து இந்தியா கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற மருத்துவ மாணவர் உயிரிழப்பு காரணம் குறித்து உறுதியா தெரியவில்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே அவரது மரணத்திற்கான காரணம் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு ஷேக் அப்துல்லாவை சிகிச்சைக்காக இந்தியா அழைத்து வர, ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.