பட்டுக்கோட்டையில் தூய்மை வார விழா, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தூய்மை வார விழா, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் மணிகண்டன், இருசக்கர வாகன முகவர்களிடம் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கும்போதே வாகன ஓட்டிகளுக்கு முறையாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் ஜோதிலிங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.