தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரட்டை மடிவலை மூலம் மீன்கள் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் தொழிலுக்குச் சென்று கரை திரும்பும் நாட்களில் தினமும் சோதனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், பாம்பன் கடலில் தொழிலுக்கு சென்று விட்டு இன்று கரை திரும்பிய விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவளத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 36 படகுகளில் இரட்டை மடி மூலம் மீன்பிடித்து வந்தது தெரிந்தது.
இந்த வலைகளில் பிடித்து வந்த 5 டன் மீன்கள், 4 விசைப்படகுகளில் இருந்த இரட்டை மடிகளை பறிமுதல் செய்தனர். கடந்த 20 நாட்களில் மட்டும் 125க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 15 டன் மீன்கள் பறிமுதல் செய்து ஏலமிட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.