பட்டுக்கோட்டையில் சிரியா, துருக்கியில் உயிரிழந்தவர்களின் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

பட்டுக்கோட்டையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிரியா துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் படத்துக்கு சமூக ஆர்வலர்கள் விதைகள் அமைப்பினர் ஒன்றிணைந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் விதைகள் அமைப்பின் தலைவர் சிதம்பரம், பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, தலைமை காவலர் இளையராஜா, சமூக ஆர்வலர் விக்னேஷ், ஸ்டாலின், சந்திரசேகர், ரோஜா ராஜசேகரன், மகேஷ், இளையராஜா, குயிலி, ரம்யா மற்றும் வியாபாரிகள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்