தஞ்சையில் 1,000 பள்ளி மாணவர்களின் மீண்டும் மஞ்சப்பை' நூதன விழிப்புணர்வு..

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சையில் 1,000 பள்ளி மாணவர்கள் மஞ்சப்பை வடிவத்தில் நின்று பதிய முயற்சியில் அசத்தினர். 

பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதமாக சிறு மாற்றத்திற்கான இந்த முயற்சியை மானஸா அகாடமி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி இணைந்து கலாம் உலக சாதனை இந்த நிகழ்ச்சியை நடத்தியது. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணியினால் ஆன சுற்றுச்சூழலிற்கு தீங்கு விளைவிக்காத மஞ்சப் பையை பயன்படுத்த "மீண்டும் மஞ்சப் பை" என்ற தலைப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர்.

அழகான நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும் என்று இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. சுமார் 1000 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்சியை தஞ்சை மாநகர மேயர் சண்.ராமநாதன் துவங்கி வைத்தார். மேலும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மஞ்சப்பை வடிவில் மாணவர்கள் நிற்கும் கழுகு பார்வையில் உள்ள இக்காட்சி அனைவரையும் ஈர்த்தது. விழா இறுதியில் கலாம் உலக சாதனை நிகழ்வில் சாதனையாளர்களுக்கு சான்றிதழ், பதக்கம், விருது, மரக்கன்று, மஞ்சப் பை, மஞ்சள் தொப்பி, மஞ்சள் பனியன் ஆகியவை வழங்கப்பட்டது‌.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்