அதிராம்பட்டினத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை - MLA அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

அதிராம்பட்டினம் நகராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 108 ஆம்புலன்ஸ் சேவையை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. எனவே இப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்நிலையில் சனிக்கிழமை அன்று 108 ஆம்புலன்ஸ் சேவையை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சேவை மண்டல அலுவலர் மோகன், ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாஹிரா அப்துல் கரீம், துணைத்தலைவர் ராமகுணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்