புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் IPAA Men's Thanjavur Divisional Athletic Meet - எனற விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் பல பகுதியிலிருந்தும் கல்லூரி சார்பில் பல மாணவர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டியில் மனோரா பாலிடெக்னிக்
கல்லூரியின் சார்பில் கலந்துகொண்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் மகன் மெளலான ஆஷிக் கலந்து கொண்டு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் இடத்தையும் 10000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மெளலான ஆஷிக்கிற்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நமது ஊர் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் மெளலான ஆஷிக்கிற்கு செந்தலை நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்..
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.