டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் தூங்கிய 6 பேர் கொசு விரட்டி மருந்தை சுவாசித்ததால் உயிரிழந்தனர்.
டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அது போல் நேற்று இரவும் கொசுவிரட்டியை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் 6 பேரும் சடலமாக காணப்பட்டனர். உடனே அறைக்குள் சென்ற போதும் போலீஸாருக்கும் லேசாக மூச்சுத்திணறியது. இதனால் அங்கிருந்த ஜன்னல்களை திறந்து விட்டனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டிலிருந்த ஆறு பேரும் இரவு முழுவதும் கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்தது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் உடற்கூறாய்வுக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.