பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார்.
அதோடு மாணவ -மாணவிகளுக்கு சாக்குகள் வழங்கி அதில் பெரிய கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் அதனை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது துணி பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கப்பட்டது. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது. அதுபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் உரிய அனுமதி பெற்று மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25000, துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10000 , சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும். மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் . பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.