பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பட்டுக்கோட்டை நகராட்சி, ரெட்கிராஸ் இணைந்து பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு ஊர்வலம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று காலை தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்து பெண்களுக்கு மஞ்சள் பை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: -

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நாளை (அதாவது இன்று) முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் சிறிய கடைக்காரர்களுக்கு ரூ. 1000 அபராதமும், பெரிய கடைக்காரர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாக பொது மக்களுக்கு மஞ்சப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். ஊர்வலம் பெரியார் சிலையிலிருந்து தொடங்கி பழனியப்பன் தெரு, தலையாரி தெரு, தலைமை தபால் நிலையம் ரோடு, காசாங்குளம் வழியாக நகராட்சி அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகராட்சி பொறியாளர் குமார், நகர தி. மு. க. செயலாளர் செந்தில்குமார், டாக்டர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்