தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கடற்கரை துறைமுகமாக மாறிக்கொண்டு வருகிற இந்நிலையில் அதற்கான வேலைகளும் கட்டிட வசதிகளும் சென்ற ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
மல்லிப்பட்டினம் அருகே உள்ள சுற்றுலா தலமான மனோராவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு திண்பண்டங்களின் குப்பைகளை அங்கு விட்டுச்சென்றனர். மேலும் கடல் பாசிகள் குவிந்து கடற்கரை மிகவும் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. கடல்பாசிகளும், நெகிழி பொருட்களும், இதர தேவையற்ற பொருட்களும் கடற்கரையை சூழ்ந்து காணப்படுவதால் கடற்பகுதி மிகவும் அசுத்த நிலையில் காட்சியளித்தது. இதை அறிந்த தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மற்றும் நேரு யுகேந்திரா மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் இணைந்து மல்லிப்பட்டினத்தில் கடற்கரையில் முகாமிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.