தரமற்ற மருந்துகள்: இனி whatsapp மூலம் புகார் செய்யலாம்

மருந்து தொடர்பான புகார்களை, 'வாட்ஸ் - ஆப்' வாயிலாக, மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்' என மருந்து கட்டுபாட்டு இயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு துறைக்கு நேரடியாகவும், கடிதம் அல்லது தொலை பேசி வாயிலாகவும் பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இனி புகார்களை வாட்ஸ் ஆப் செயலி மூலமாகவும் பெறுவதற்கு ஏதுவாக 94458 65400 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமாக அளிக்கலாம். புகார்களைப் பற்றிய விவரங்கள். உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்