ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
புதுக்கோட்டை வாரச்சந்தை புதுக்கோட்டை சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி, காரைக்குடி, தேவக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.இதில் பெட்டை ஆடுகளை விட கிடா ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று வழக்கத்தைவிட ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.1 கோடிவரை வர்த்தகம் நடைபெற்றது. மேலும் அடுத்தவார சந்தையில் ஆடுகளின் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.