அதிராம்பட்டினம் நகராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அதிராம்பட்டினம் நகராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது. இதுதவிர தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் மீனவர்கள் வாழும் பகுதியாகவும், மையமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடற்கரையையொட்டி பல கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் ஏராளமான மீனவர்கள் கூரை வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் காற்று இயல்பை விட கூடுதலாகவே வீசும். ஏதோ சில காரணங்களால் தீ பற்றும் போது காற்றின் வேகத்தால் விரைவில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. 

இப்படி இருக்கையில் தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கும் போது 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையிலிருந்து தான் தீயணைப்புவீரர்கள் வர வேண்டும். அப்படி வரும் போது பல்வேறு போக்குவரத்து இடையூறுகளை கடந்து வருவதற்குள் தீ முற்றிலுமாக பரவி பெரும் சேதம் ஏற்படுகிறது. 

எனவே தீ விபத்துகளை தடுக்கும் வகையில் அதிராம்பட்டினம் நகராட்சி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்