தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வரும் குடும்ப தலைவிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சை ஜோதி அறக்கட்டளை தஞ்சை நகர போக்கு வரத்து காவல்துறையுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வரும் குடும்ப தலைவிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த குடும்ப தலைவிகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 1 லிட்டர் இலவச பெட்ரோலுக்கான கூப்பன்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-
குடும்ப தலைவிகளான நீங்கள் எப்படி அரசின் சட்டதிட்டங்களை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து வருகிறீர்களோ அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவுறுத்துங்கள் என்றார். நிகழ்ச்சியில்போக்குவரத்து உதவி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.