அதிராம்பட்டினத்தில் குண்டும், குழியுமான ரயில்வே கேட் சாலை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


அதிராம்பட்டினத்தில் குண்டும், குழியுமான ரயில்வே கேட்
சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம்  அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே கேட்டை கடந்து மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திம், என பல்வேறு ஊா்களுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரயில்வே கேட் தண்டவாளங்களை கடக்கும் தாா் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலையில் பெரும் பள்ளங்கள் இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன.

இந்தச் சாலையில், தெரு விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பயணிகள் பள்ளத்தில் விழுந்து செல்கின்றனா். பகுதிவாசிகள் சிலா் சாலை பள்ளம் இருப்பதை உணா்த்த கற்களை போட்டு எச்சரித்து உள்ளனா். இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் அப்பகுதியை கடக்கும்போது தடுமாறுகின்றனா். இரவு நேரங்களில் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் மாற்றுப்பாதையில் செல்லும்போது வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்