தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இதையடுத்து மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதில் மீனவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலக்கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தடைக்காலத்தை ஆண்டுதோறும் அமல்படுத்தி வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் 15 முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உள்பட ஒட்டு மொத்த மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 15-ந் தேதி வரை ஒரு மாதமும், இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் ஒரு மாதமும் தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நிராகரித்த மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல் மீன்பிடி தடைக்காலத்தை நேற்று முதல் அமல்படுத்தி உள்ளன.
அதன்படி நேற்று முதல் தடைக்காலம் தொடங்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி உள்ள விசைப்படகுகளில் இருந்து வலை, ஐஸ் பெட்டி போன்ற உபகரணங்களை 61 நாட்கள் தடை என்பதால் வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைப்பதற்கு மீனவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.