பேராவூரணி - திருப்பதி பேருந்து சேவை தொடக்கம் - அசோக்குமார் MLA கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

பேராவூரணியில் இருந்து  திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு விரைவு பேருந்து இயக்க வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் பேராவூரணி நகருக்குள் வந்து செல்லும் வகையில் வெளியூர் தொலைதூரப் பேருந்துகளை இயக்க வேண்டும்" என சட்டமன்றத்தில் பேராவூரணி எம். எல். ஏ என். அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், "திருப்பதிக்கு உடனடியாக பேருந்து இயக்கப்படும்" என அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் அரசு விரைவுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  
இந்த நிகழ்ச்சியில் விரைவுப் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளர் முருகேசன், கும்பகோணம் கிளை மேலாளர் சேகர், பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம், திமுக மாவட்ட அவை தலைவர் சுப. சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க. அன்பழகன், மு. கி. முத்துமாணிக்கம், வை. ரவிச்சந்திரன், இளங்கோவன், நகரச் செயலாளர் என். எஸ். சேகர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என். செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் அலிவலம் மூர்த்தி, சுவாதி காமராஜ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், திமுகவினர்  மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்